அதிகாரம் 116
பிரிவு ஆற்றாமை
கண்ணுக்குள் வாழ்கின்ற காதலனே சொல்லாதே வருகிறேன் என்றஉரை வாங்கிவிடும் என்னுயிரை காதலனின் கண்பார்க்கக் களிகூறும் என்னெஞ்சு பிரிவுஎன்று சொன்னவுடன் பித்தானேன் என்றுசொல்லு அஞ்சாதே என்னவளே அருகிருப்பேன் எந்நாளும் என்றவரும் சொன்ன உரை என்னாச்சு தெரியலையே புதியஊர் போய் வாழ்தல் பெருந்துன்பம் அதையும்விட கணவரைப் பிரிந்திருத்தல் கொடுந்துன்பம் என்றுசொல்லு தொட்டால்த்தான் சுடும்நெருப்பு தூரத்தில் அவரிருக்க தொடாமல் நானிருக்க சுடுகிறதே காமத்தீ
- வேற்கவிராயர்