அதிகாரம் 119
பசப்புறு பருவரல்
முன்னாலே நான்செய்த மூடச் செயலாலே பசலையாம் என்மேனி பரதவிக்கச் செய்கிறதே பாராத கணவன்தான் பசலைவரக் காரணமே நான்பெற்ற இப்பசலை நாணந்தான் கைத்திடுதே காமமதும் பசலையதும் கைமாறு செய்துவிட்டு அழகையும் நாணத்தையும் அவர் எடுத்துக் சென்றாரோ விளக்கை அணைத்தவுடன் வெளிச்சம் போய் வரும் இருள்போல் இணைந்தார் பிரிந்தவுடன் என் மேனி பசப்புறுதே இவள்மேனி பசலைக்கு இவளேதான் பொறுப்பென்று ஏசுவார் என்னைமட்டும் ஏன் ? அவரை விட்டுவிட்டு
- வேற்கவிராயர்