அதிகாரம் 122
கனவு நிலை உரைத்தல்
காதலரின் தூதுசொல்லக் கண்ணில் கனாவினுக்கு என்னவகை உணவளித்து எப்படி - நான் உபசரிப்பேன் கண்ணே நீ உறங்கிடுவாய் கனாக் காண்பேன் காதலர்க்கு தூதாக அதுசென்று சொல்லும் துன்பமெலாம் நனவாகும் வேளையிலே நல்காதார் இன்பமதை கனவினிலே கண்டுகண்டு களிப்பானேன் என்தோழி துஞ்சுங்கால் என்னைவந்து தோள்தழுவும் காதலர்தான் விழித்தவுடன் காணாமல் விரைந்து மறைந்திடுவார் கனவினால் காண்கின்ற காதலரை ஒருபோதும் வரவில்லை என்று சொல்லி வருத்தப்படமாட்டேன் நான்
- வேற்கவிராயர்