அதிகாரம் 124
உறுப்பு நலனழிதல்
நம்முடைய கண்களுக்கு நாணிநின்ற நறுமலர்கள் நம்கண்கள் ஒளியிழந்நு நாணவைத்தார் காதலர்தான் உடனுறைவார் இல்லாத உண்மையினை வெளிப்படுத்தி உகுக்குதே என்கண்கள் ஊர் அறியக் கண்ணீரை தெங்கங்காய் போலஅன்று திரண்டிருந்த என் மேனி முருங்கையின் நெற்றுப்போல் முற்றும் மெலிகிறதே கைகள் மெலிவடைந்து கைவளையல் கழன்றுவிழ கண்டுநான் கலங்குவதைக் காதலர்க்குச் சொல்வாயே என்மேல் சிறிதேனும் இரக்கமிலார் தூற்றுவதால் நான்கொண்ட வாட்டமதை நன் நெஞ்சே தவிர்பாய் நீ அணைத்த என் கைகளையும் அகற்றிய சிறு பொழுதே அலர்வந்து நெற்றியிலே அடைந்தேன் நான்பசலை நிறம் இறுக்கமாய் அணைத்தாலும் இடைவெளியில் கால் நுழைந்து காதலியின் கருவிழியைக் கலைந்து நிறம் மாற்றியதே
- வேற்கவிராயர்