அதிகாரம் 128
குறிப்பு அறிவுறுத்தல்
நீயே மறுத்தாலும் நின்துன்பம் உன்கண்கள் உண்மையை உரைத்திடுமோர் உரைக்கல்லாம் நானறிவேன் பேரழகுப் பெட்டகமாம் பெருத்ததோள் காதலியின் பெண்மைக்குரிய பண்பு பெரிதாகும் என்று சொல்லு மலராத மொட்டுக்குள் மறைந்துள்ள வாசம் போல் சிரிக்காத இதழ்களிலே தெரியாமல் உண்டொன்று கைநிறைய வளையல்களும் கள்ளமுள்ள உள்மனதும் கொண்டுள்ள காதலியால் கொண்டதுயர் எனக்குண்டு நீ எனக்குத் தந்ததுன்பம் நீங்கிடவும் வேண்டுமெனில் நீயேதான் மருந்தாவாய் நேரிழையே நானறிவேன் என்கணவர் பிரிதின்னும் ஏழுநாள் ஆகவில்லை அதற்குள்ளலே என்மேனி அசிங்கமாய் பசந்ததுவே பெண்னென்பாள் பெண்மையதைப் பேணும் வகை என்னென்றால் கண்களினால் பேசியந்தக் காரியத்தைப் பெறுவாளாம் .
- வேற்கவிராயர்