அதிகாரம் 132
புலவி நுணுக்கம்
பலபெண்கள் உன்மார்பைப் பார்த்திருப்பார் என்பதினால் அணைத்திடேன் அம்மார்பை அன்புள்ள காதலரே தோழியே எதற்காகத் தும்மினார் தெரிந்தேன் நான் வாழ்கநீ நூற்றுக்கு வாழ்த்துவேன் என நினைந்து இம்மைப் பிறப்பிலுன்னை இருப்பேன் பிரியாமல் என்றவுடன் கண்ணீரை இறைத்திட்டாள் புரியவில்லை இம்மைப் பிறப்பில் மட்டும் இங்கிருப்பேன் என்றீரே எதிர்வரும் பிறப்பினிலே எங்கிருப்பீர் அழுகின்றேன் நச்சென்று தும்மினேன் நல்வாழ்த்து என்றுசொல்லி நினைத்தவள் யாரென்று நெடுமூச்சு விட்டெறிந்தாள் அவளையே கண்ணுற்று அழகைநான் பருகுகிறேன் என்னழகைச் சரிபார்க்க எவள் சொன்னாள் என்கின்றாள்
- வேற்கவிராயர்