அதிகாரம் 125
நெஞ்சொடு கிளத்தல்
நெஞ்சே நீ நன்றாய்ந்து நேர்ந்துள்ள நோய்தீர்க்க நல்லதோர் மருந்தெனக்கு நவில்வாய் நீ நான் வாழ அவர்நினைவில் நானில்லை அவரை ஏன் நீ நினைத்து அல்லல் ஏன் படுகின்றாய் அசடே என் மட நெஞ்சே பிரிவு நோய் செய்தவர்க்கு பரிவு ஏன் காட்டுவது நினைந்து வருந்தாதே நெஞ்சே நீ அகற்றிவிடு செழுநெஞ்சே அவரிடந்தான் செல்ல நினைப்பாயேல் உன்னோடு கண்களையும் உடன்கூட்டி செல்வாயே கண்களை விட்டுவிட்டுக் காதலர்பால் செல்வாயேல் கண்கள் எனைத்தின்னும் கவலையும் பெரிதாகும் . நன்னெஞ்சே வேண்டுகிறேன் நாணத்தை விட்டுவிடு நாணந்தான் வேண்டுமெனில் காமத்தை விட்டுவிடு இவ்விரண்டும் சேர்ந்திருந்தால் என்னுயிரைக் கொன்றுவிடும் நல்லா இருப்பாய் நீ நான்வாழ விட்டுவிடு இன்னும் அவரை எண்ணி இருப்பதினால் பலனில்லை என்னழகை வீணாக இழந்திடவும் தேவையில்லை
- வேற்கவிராயர்