அதிகாரம் 129
புணர்ச்சி விதும்பல்
நினைத்தாலே இன்பம்வரும் கண்டால் களிப்புமிகும் கள்ளுக்கு இல்லையந்த காமத்திற்குள்ள பண்பு தினையளவு என்றாலும் திறம்பாது இணைந்திடனும் பனையளவாய்க் காமமது பயின்று வரும் வேளையிலே என்காதல் பேணாது இருந்தாலும் காதலரைக் காணாமல் இருப்பதற்குக் கண்கள் விரும்பலையே கொண்டேன் விரதம்நான் கூடுதற்கு இல்லை என்று பொல்லாத என்மனது போகுதே அதை மறந்து காணாத வேளையிலே காண்கிறேன் அவர் குற்றம் காண்கின்ற வேளையிலே காண்கிலேன் குற்றம் ஒன்றும் கள்ளால் வருந்தீமை கண்டிருந்தும் குடிப்பவன்தான் கள்ளுக்கடை கண்டால் கவ்வாமல் விடமாட்டான் காமத்தால் வருந்தீமை கண்டிருந்தும் உன்மார்பில் கள்ளுண்பார் போல்நானும் கலந்தின்பம் காண்பேனே மலர்போல் மெல்லியதாம் மலர்ந்து வரும் காமமது அதன் தன்மை தானறிந்து அணைத்திடுதல் அறிவுடைமை
- வேற்கவிராயர்