பொழுது கண்டு இரங்கல் — அதிகாரம் 123
Evening Sorrows துன்புறுத்தும் மாலை
குறள்கள்
- குறள் 1221 — மாலையோ வல்லை மணந்தா ரயிரண்ணும் வேலைநீ வாழி பொழுது
- குறள் 1222 — புன்கண்ணை வாழி மருண்மாலை யெங்கேள்போல் வன்கண்ண தோநின் றுணை
- குறள் 1223 — பனியரும்பிப் பைதல்கொண் மாலை துனியரும்பித் துன்பம் வளர வரும்
- குறள் 1224 — காதல ரில்வழி மாலை கொலைக்களத் தேதிலர் போல வரும்
- குறள் 1225 — காலைக்குச் செய்தநன் றென்கொ லெவன்கொல்யான் மாலைக்குச் செய்த பகை
- குறள் 1226 — மாலைநோய் செய்தல் மணந்தா ரகலாத கால மறிந்த திலேன்
- குறள் 1227 — காலை யரும்பிப் பகலெல்லாம் போதாகி மாலை மலருமிந் நோய்
- குறள் 1228 — அழல்போலு மாலைக்குத் தூதாகி யாயன் குழல்போலுங் கொல்லும் படை
- குறள் 1229 — பதிமருண்டு பைத லுழக்கு மதிமருண்டு மாலை படர்தரும் போழ்து
- குறள் 1230 — பொருண்மாலை யாளரை யுள்ளி மருண்மாலை மாயும்என் மாயா வுயிர்