திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

பிரிவு ஆற்றாமை — அதிகாரம் 116

காமத்துப்பால் · கற்பு இயல்

Separation பிரிவுத் துயர் தாளாமை

குறள்கள்

  1. குறள் 1151 — செல்லாமை யுண்டே லெனக்குரை மற்றுநின் வல்வரவு வாழ்வார்க் குரை
  2. குறள் 1152 — இன்க ணுடைத்தவர் பார்வல் பிரிவஞ்சும் புன்க ணுடைத்தாற் புணர்வு
  3. குறள் 1153 — அரிதரோ தேற்ற மறிவுடையார் கண்ணும் பிரிவோ ரிடத்துண்மை யான்
  4. குறள் 1154 — அளித்தஞ்ச லென்றவர் நீப்பிற் றெளித்தசொற் றேறியார்க் குண்டோ தவறு
  5. குறள் 1155 — ஓம்பி னமைந்தார் பிரிவோம்பல் மற்றவர் நீங்கி னரிதாற் புணர்வு
  6. குறள் 1156 — பிரிவுரைக்கும் வன்கண்ண ராயி னரிதவர் நல்குவ ரென்னு நசை
  7. குறள் 1157 — துறைவன் றுறந்தமை தூற்றாகொல் முன்கை இறையிறவா நின்ற வளை
  8. குறள் 1158 — இன்னாது இனனில்லூர் வாழ்த லதனினும் இன்னா தினியார்ப் பிரிவு
  9. குறள் 1159 — தொடிற்சுடி னல்லது காமநோய் போல விடிற்சுட லாற்றுமோ தீ
  10. குறள் 1160 — அரிதாற்றி யல்லனோய் நீக்கிப் பிரிவாற்றிப் பின்னிருந்து வாழ்வார் பலர்
குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural