திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

நிறை அழிதல் — அதிகாரம் 126

காமத்துப்பால் · கற்பு இயல்

Farewell, Reserve! தன் நிலை இழத்தல்

குறள்கள்

  1. குறள் 1251 — காமக் கணிச்சி யுடைக்கும் நிறையென்னும் நாணுத்தாழ் வீழ்த்த கதவு
  2. குறள் 1252 — காமமென வொன்றோ கண்ணின்றென் நெஞ்சத்தை யாமத்து மாளுந் தொழில்
  3. குறள் 1253 — மறைப்பேன்மற் காமத்தை யானோ குறிப்பின்றித் தும்மல்போற் றோன்றி விடும்
  4. குறள் 1254 — நிறையுடையே னென்பேன்மன் யானோவென் காம மறையிறந்து மன்று படும்
  5. குறள் 1255 — செற்றார்பின் செல்லாப் பெருந்தகைமை காமநோ யுற்றா ரறிவதொன் றன்று
  6. குறள் 1256 — செற்றவர் பின்சேறல் வேண்டி யளித்தரோ வெற்றென்னை யுற்ற துயர்
  7. குறள் 1257 — நாணென வொன்றோ வறியலங் காமத்தாற் பேணியார் பெட்ப செயின்
  8. குறள் 1258 — பன்மாயக் கள்வன் பணிமொழி யன்றோநம் பெண்மை யுடைக்கும் படை
  9. குறள் 1259 — புலப்ப லெனச்சென்றேன் புல்லினே னெஞ்சங் கலத்த லுறுவது கண்டு
  10. குறள் 1260 — நிணந்தீயி லிட்டன்ன நெஞ்சினார்க் குண்டோ புணர்ந்தூடி நிற்போ மெனல்
குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural