நெஞ்சொடு புலத்தல் — அதிகாரம் 130
Quarrelling with her Heart நெஞ்சோடு புலம்பல்
குறள்கள்
- குறள் 1291 — அவர்நெஞ் சவர்க்காதல் கண்டு மெவனெஞ்சே நீயெமக் காகா தது
- குறள் 1292 — உறூஅ தவர்கண்ட கண்ணு மவரைச் செறாஅரெனச் சேறியென் னெஞ்சு
- குறள் 1293 — கெட்டார்க்கு நட்டாரி லென்பதோ நெஞ்சேநீ பெட்டாங் கவர்பின் செலல்
- குறள் 1294 — இனியன்ன நின்னோடு சூழ்வார்யார் நெஞ்சே துனிசெய்து துவ்வாய்காண் மற்று
- குறள் 1295 — பெறாஅமை அஞ்சும் பெறிற்பிரி வஞ்சு மறாஅ விடும்பைத்தென் னெஞ்சு
- குறள் 1296 — தனியே யிருந்து நினைத்தக்கா லென்னைத் தினிய விருந்ததென் நெஞ்சு
- குறள் 1297 — நாணும் மறந்தே னவர்மறக் கல்லாவென் மாணா மடநெஞ்சிற் பட்டு
- குறள் 1298 — எள்ளி னிளிவாமென் றெண்ணி யவர்திற முள்ளு முயிர்க்காத னெஞ்சு
- குறள் 1299 — துன்பத்திற் கியாரே துணையாவார் தாமுடைய நெஞ்சந் துணையல் வழி
- குறள் 1300 — தஞ்சந் தமரல்ல ரேதிலார் தாமுடைய நெஞ்சத் தமரல் வழி