நெஞ்சொடு கிளத்தல் — அதிகாரம் 125
To her Heart தன் நெஞ்சோடு தானே பேசுதல்
குறள்கள்
- குறள் 1241 — நினைத்தொன்று சொல்லாயோ நெஞ்சே யெனைத்தொன்று மெவ்வநோய் தீர்க்கும் மருந்து
- குறள் 1242 — காத லவரில ராகநீ நோவது பேதமை வாழியென் னெஞ்சு
- குறள் 1243 — இருந்துள்ளி யென்பரித னெஞ்சே பரிந்துள்ளல் பைதல்நோய் செய்தார் கணில்
- குறள் 1244 — கண்ணுங் கொளச்சேறி நெஞ்சே இவையென்னைத் தின்னும் அவர்காண லுற்று
- குறள் 1245 — செற்றா ரெனக்கை விடலுண்டோ நெஞ்சேயா முற்றா லுறாஅ தவர்
- குறள் 1246 — கலந்துணர்த்துங் காதலர்க் கண்டாற் புலந்துணராய் பொய்க்காய்வு காய்தியென் நெஞ்சு
- குறள் 1247 — காமம் விடுவொன்றோ நாண்விடு நன்னெஞ்சே யானோ பொறேனிவ் விரண்டு
- குறள் 1248 — பரிந்தவர் நல்காரென் றேங்கிப் பிரிந்தவர் பின்செல்வாய் பேதையென் னெஞ்சு
- குறள் 1249 — உள்ளத்தார் காத லவராக வுள்ளிநீ யாருழைச் சேறியென் னெஞ்சு
- குறள் 1250 — துன்னாத் துறந்தாரை நெஞ்சத் துடையேமாவின்னு மிழத்துங் கவின்