குறள் 1246 — நெஞ்சொடு கிளத்தல்
காமத்துப்பால் · கற்பு இயல் · நெஞ்சொடு கிளத்தல்
குறள்
கலந்துணர்த்துங் காதலர்க் கண்டாற் புலந்துணராய்
பொய்க்காய்வு காய்தியென் நெஞ்சு
பொருள்
நெஞ்சே! கூடி மகிழ்விக்கும் அவரைக், கண்டால் வெறுக்க மாட்டாய். என்னை ஏன் வாட்டுகிறாய்?