கண் விதுப்பு அழிதல் — அதிகாரம் 118
The Eyes Longing காத்திருக்கும் கண்கள்
குறள்கள்
- குறள் 1171 — கண்டாங் கலுழ்வ தெவன்கொலோ தண்டாநோய் தாங்காட்ட யாங்கண் டது
- குறள் 1172 — தெரிந்துணரா நோக்கிய உண்கண் பரிந்துணராப் பைத லுழப்ப தெவன்
- குறள் 1173 — கதுமெனத் தாநோக்கித் தாமே கலுழும் இதுநகத் தக்க துடைத்து
- குறள் 1174 — பெயலாற்றா நீருலந்த வுண்க ணுயலாற்றா உய்வினோ யென்கண் நிறுத்து
- குறள் 1175 — படலாற்றா பைதல் லுழக்குங் கடலாற்றாக் காமநோய் செய்தவென் கண்
- குறள் 1176 — ஓஒ வினிதே யெமக்கிந்நோய் செய்தகண் தாஅ மிதற்பட் டது
- குறள் 1177 — உழந்துழந் துண்ணீ ரறுக விழைந்திழைந்து வேண்டி யவர்கண்ட கண்
- குறள் 1178 — பேணாது பெட்டா ருளர்மன்னோ மற்றவர்க் காணா தமைவில கண்
- குறள் 1179 — வாராக்காற் றுஞ்சா வரிற்றுஞ்சா ஆயிடை யாரஞ ருற்றன கண்
- குறள் 1180 — மறைபெற லூரார்க் கரிதன்றா லெம்போ லறைபறை கண்ணா ரகத்து