அவர்வயின் விதும்பல் — அதிகாரம் 127
Mutual Longing மறக்க மறுக்கிறதே!
குறள்கள்
- குறள் 1261 — வாளற்றுப் புற்கென்ற கண்ணு மவர்சென்ற நாளொற்றித் தேய்ந்த விரல்
- குறள் 1262 — இலங்கிழா யின்று மறப்பினென் றோண்மேற் கலங்கழியுங் காரிகை நீத்து
- குறள் 1263 — உரனசைஇ யுள்ளந் துணையாகச் சென்றார் வரனசைஇ யின்னு முளேன்
- குறள் 1264 — கூடிய காமம் பிரிந்தார் வரவுள்ளிக் கோடுகொ டேறுமென் னெஞ்சு
- குறள் 1265 — காண்கமற் கொண்கனைக் கண்ணாரக் கண்டபி னீங்குமென் மென்றோட் பசப்பு
- குறள் 1266 — வருகமற் கொண்க னொருநாட் பருகுவன் பைதனோ யெல்லாம் கெட
- குறள் 1267 — புலப்பேன்கொல் புல்லுவேன் கொல்லோ கலப்பேன்கொல் கண்ணன்ன கேளிர் வரின்
- குறள் 1268 — வினைகலந்து வென்றிக வேந்தன் மனைகலந்து மாலை யயர்கம் விருந்து
- குறள் 1269 — ஒருநா ளெழுநாள்போற் செல்லுஞ்சேட் சென்றார் வருநாள்வைத் தேங்கு பவர்க்கு
- குறள் 1270 — பெறினென்னாம் பெற்றக்கா லென்னா முறினென்னா முள்ள முடைந்துக்கக் கால்