திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

புலால் மறுத்தல் — அதிகாரம் 26

அறத்துப்பால் · துறவற இயல்

Vegetarianism புலால் மறுத்தல்

குறள்கள்

  1. குறள் 251 — தன்னூன் பெருக்கற்குத் தான்பிறி தூனுண்பா னெங்ஙன மாளு மருள்
  2. குறள் 252 — பொருளாட்சி போற்றாதார்க் கில்லை யருளாட்சி யாங்கில்லை யூன்றின் பவர்க்கு
  3. குறள் 253 — படைகொண்டார் நெஞ்சம்போ னன்றூக்கா தொன்றி னுடல்சுவை யுண்டார் மனம்
  4. குறள் 254 — அருளல்ல தியாதெனிற் கொல்லாமை கோறல் பொருளல்ல தவ்வூன் றினல்
  5. குறள் 255 — உண்ணாமை யுள்ள துயிர்நிலை யூனுண்ண வண்ணாத்தல் செய்யா தளறு
  6. குறள் 256 — தினற்பொருட்டாற் கொள்ளா துலகெனின் யாரும் விலைப்பொருட்டா லூன்தருவா ரில்
  7. குறள் 257 — உண்ணாமை வேண்டும் புலாலைப் பிறிதொன்றின் புண்ண துணர்வார்ப் பெறின்
  8. குறள் 258 — செயிரிற் றலைப்பிரிந்த காட்சியா ருண்ணா ருயிரிற் றலைப்பிரிந்த வூண்
  9. குறள் 259 — அவிசொரிந் தாயிரம் வேட்டலி னொன்றி னுயிர்செகுத் துண்ணாமை நன்று
  10. குறள் 260 — கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி யெல்லா வுயிருந் தொழும்
குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural