குறள் 252 — புலால் மறுத்தல்
அறத்துப்பால் · துறவற இயல் · புலால் மறுத்தல்
குறள்
பொருளாட்சி போற்றாதார்க் கில்லை யருளாட்சி
யாங்கில்லை யூன்றின் பவர்க்கு
பொருள்
பொருள் வளம் அதனைப் போற்றிக் கொள்ளாதவர்க்கு இல்லை. அருள் வளமும் அவ்வாறே புலால் உண்பவர்க்கு இல்லை.