நிலையாமை — அதிகாரம் 34
Impermanence நிலைக்காமை
குறள்கள்
- குறள் 331 — நில்லா தவற்றை நிலையின வென்றுணரும் புல்லறி வாண்மை கடை
- குறள் 332 — கூத்தாட் டவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம் போக்கும் மதுவிளிந் தற்று
- குறள் 333 — அற்கா வியல்பிற்றுச் செல்வ மதுபெற்றா லற்குப வாங்கே செயல்
- குறள் 334 — நாளென வொன்றுபோற் காட்டி யுயிரீரும் வாள துணர்வார்ப் பெறின்
- குறள் 335 — நாச்செற்று விக்குண்மேல் வாராமு னல்வினை மேற்சென்று செய்யப் படும்
- குறள் 336 — நெருந லுளனொருவ னின்றில்லை யென்னும் பெருமை யுடைத்திவ் வுலகு
- குறள் 337 — ஒருபொழுதும் வாழ்வ தறியார் கருதுப கோடியு மல்ல பல
- குறள் 338 — குடம்பை தனித்தொழியப் புட்பறந் தற்றே யுடம்போ டுயிரிடை நட்பு.
- குறள் 339 — உறங்கு வதுபோலுஞ் சாக்கா டுறங்கி விழிப்பது போலும் பிறப்பு
- குறள் 340 — புக்கி லமைந்தின்று கொல்லோ வுடம்பினுட் டுச்சி லிருந்த வுயிர்க்கு