மெய் உணர்தல் — அதிகாரம் 36
Realization உண்மையை உணர்தல்
குறள்கள்
- குறள் 351 — பொருளல்ல வற்றைப் பொருளென் றுணரு மருளானா மாணாப் பிறப்பு
- குறள் 352 — இருணீங்கி யின்பம் பயக்கும் மருணீங்கி மாசறு காட்சி யவர்க்கு
- குறள் 353 — ஐயத்தி னீங்கித் துணிந்தார்க்கு வையத்தின் வான நணிய துடைத்து
- குறள் 354 — ஐயுணர் வெய்தியக் கண்ணும் பயமின்றே மெய்யுணர் வில்லா தவர்க்கு
- குறள் 355 — எப்பொரு ளெத்தன்மைத் தாயினு மப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு
- குறள் 356 — கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர் மற்றீண்டு வாரா நெறி
- குறள் 357 — ஓர்த்துள்ள முள்ள துணரி னொருதலையாப் பேர்த்துள்ள வேண்டா பிறப்பு
- குறள் 358 — பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னுஞ் செம்பொருள் காண்ப தறிவு
- குறள் 359 — சார்புணர்ந்து சார்பு கெடவொழுகின் மற்றழித்துச் சார்தரா சார்தரு நோய்
- குறள் 360 — காமம் வெகுளி மயக்க மிவைமூன்றி னாமங் கெடக்கெடு நோய்