திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

கள்ளாமை — அதிகாரம் 29

அறத்துப்பால் · துறவற இயல்

Thieving பிறர் பொருள் விரும்பாமை

குறள்கள்

  1. குறள் 281 — எள்ளாமை வேண்டுவா னென்பா னெனைத்தொன்றுங் கள்ளாமை காக்கதன் னெஞ்சு
  2. குறள் 282 — உள்ளத்தா லுள்ளலுந் தீதே பிறன்பொருளைக் கள்ளத்தாற் கள்வே மெனல்
  3. குறள் 283 — களவினா லாகிய வாக்க மளவிறந் தாவது போலக் கெடும்
  4. குறள் 284 — களவின்கட் கன்றிய காதல் விளைவின்கண் வீயா விழுமந் தரும்
  5. குறள் 285 — அருள்கருதி யன்புடைய ராதல் பொருள்கருதிப் பொச்சாப்புப் பார்ப்பார்க ணில்
  6. குறள் 286 — அளவின்க ணின்றொழுக லாற்றார் களவின்கட் கன்றிய காத லவர்
  7. குறள் 287 — களவென்னுங் காரறி வாண்மை யளவென்னு மாற்றல் புரிந்தார்க ணில்
  8. குறள் 288 — அளவறிந்தார் நெஞ்சத் தறம்போல நிற்குங் களவறிந்தார் நெஞ்சிற் கரவு
  9. குறள் 289 — அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்ல மற்றைய தேற்றா தவர்
  10. குறள் 290 — கள்வார்க்குத் தள்ளு முயிர்நிலை கள்ளார்க்குத் தள்ளாது புத்தே ளுலகு
குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural