இன்னா செய்யாமை — அதிகாரம் 32
Not Hurting Others எவ்வுயிர்க்கும் துன்பம் செய்யாதிருத்தல்
குறள்கள்
- குறள் 311 — சிறப்பீனுஞ் செல்வம் பெறினும் பிறர்க்கின்னா செய்யாமை மாசற்றார் கோள்.
- குறள் 312 — கறுத்தின்னா செய்தவற் கண்ணு மறுத்தின்னா செய்யாமை மாசற்றார் கோள்
- குறள் 313 — செய்யாமல் செற்றார்க்கு மின்னாத செய்தபி னுய்யா விழுமந் தரும்
- குறள் 314 — இன்னாசெய் தாரை யொறுத்த லவர்நாண நன்னயஞ் செய்து விடல்
- குறள் 315 — அறிவினா னாகுவ துண்டோ பிறிதுநோய் தன்னோய்போற் போற்றாக் கடை
- குறள் 316 — இன்னா வெனத்தா னுணர்ந்தவை துன்னாமை வேண்டும் பிறன்கட் செயல்
- குறள் 317 — எனைத்தானு மெஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானு மாணாசெய் யாமை தலை
- குறள் 318 — தன்னுயிர்க்கு கின்னாமை தானறிவா னென்கோலோ மன்னுயிர்க் கின்னா செயல்
- குறள் 319 — பிறர்க்கின்னா முற்பகற் செய்யிற் தமக்கின்னா பிற்பகற் றாமே வரும்
- குறள் 320 — நோயெல்லா நோய்செய்தார் மேலவா நோய்செய்யார் நோயின்மை வேண்டு பவர்