திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

வான் சிறப்பு — அதிகாரம் 2

அறத்துப்பால் · பாயிரம்

Rain மழையின் பெருமை

குறள்கள்

  1. குறள் 11 — வானின் றுலகம் வழங்கி வருதலாற் றானமிழ்த மென்றுணரற் பாற்று
  2. குறள் 12 — துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉ மழை
  3. குறள் 13 — விண்ணின்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத் துண்ணின் றுடற்றும் பசி
  4. குறள் 14 — ஏரி னுழாஅ ருழவர் புயலென்னும் வாரி வளங்குன்றிக் கால்
  5. குறள் 15 — கெடுப்பதூஉங் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே எடுப்பதூஉ மெல்லா மழை
  6. குறள் 16 — விசும்பிற் றுளிவீழி னல்லான்மற் றாங்கே பசும்புற் றலைகாண் பரிது
  7. குறள் 17 — நெடுங்கடலுந் தன்னீர்மை குன்றுந் தடிந்தெழிலி தானல்கா தாகி விடின்
  8. குறள் 18 — சிறப்பொடு பூசனை செல்லாது வானம் வறக்குமேல் வானோர்க்கு மீண்டு
  9. குறள் 19 — தானந் தவமிரண்டுந் தங்கா வியனுலகம் வானம் வழங்கா தெனின்
  10. குறள் 20 — நீரின் றமையா துலகெனின் யார்யார்க்கும் வானின் றமையா தொழுக்கு
குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural