ஊழ் — அதிகாரம் 38
Fate விதியின் வலிமை
குறள்கள்
- குறள் 371 — ஆகூழாற் றோன்று மசைவின்மை கைப்பொருள் போகூழாற் றோன்று மடி
- குறள் 372 — பேதைப் படுக்கு மிழவூ ழறிவகற்று மாகலூ ழுற்றக் கடை
- குறள் 373 — நுண்ணிய நூல்பல கற்பினு மற்றுந்தன் னுண்மை யறிவே மிகும்
- குறள் 374 — இருவே றுலகத் தியற்கை திருவேறு தெள்ளிய ராதலும் வேறு
- குறள் 375 — நல்லவை யெல்லாஅந் தீயவாந் தீயவு நல்லவாஞ் செல்வஞ் செயற்கு
- குறள் 376 — பரியினு மாகாவாம் பாலல்ல வுய்த்துச் சொரியினும் போகா தம
- குறள் 377 — வகுத்தான் வகுத்த வகையல்லாற் கோடி தொகுத்தார்க்குத் துய்த்த லரிது
- குறள் 378 — துறப்பார்மற் றுப்புர வில்லா ருறற்பால வூட்டா கழியு மெனின்
- குறள் 379 — நன்றாங்கா னல்லவாக் காண்பவ ரன்றாங்கா லல்லற் படுவ தெவன்
- குறள் 380 — ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று சூழினுந் தான்முந் துறும்