திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

வெஃகாமை — அதிகாரம் 18

அறத்துப்பால் · இல்லற இயல்

Covetousness பிறர் பொருளை அபகரிக்க எண்ணாமை

குறள்கள்

  1. குறள் 171 — நடுவின்றி நன்பொருள் வெஃகிற் குடிபொன்றிக் குற்றமு மாங்கே தரும்
  2. குறள் 172 — படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார் நடுவன்மை நாணு பவர்
  3. குறள் 173 — சிற்றின்பம் வெஃகி யறனல்ல செய்யாரே மற்றின்பம் வேண்டு பவர்
  4. குறள் 174 — இலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற புன்மையில் காட்சி யவர்
  5. குறள் 175 — அஃகி யகன்ற வறிவென்னாம் யார்மாட்டும் வெஃகி வெறிய செயின்
  6. குறள் 176 — அருள்வெஃகி யாற்றின்க ணின்றான் பொருள்வெஃகிப் பொல்லாத சூழக் கெடும்
  7. குறள் 177 — வேண்டற்க வெஃகியா மாக்கம் வினைவயின் மாண்டற் கரிதாம் பயன்
  8. குறள் 178 — அஃகாமை செல்வத்திற் கியாதெனின் வெஃகாமை வேண்டும் பிறன்கைப் பொருள்
  9. குறள் 179 — அறனறிந்து வெஃகா வறிவுடையார்ச் சேருந் திறனறிந் தாங்கே திரு
  10. குறள் 180 — இறலீனு மெண்ணாது வெஃகின் விறலீனும் வேண்டாமை யென்னுஞ் செருக்கு
குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural