வாழ்க்கைத்துணை நலம் — அதிகாரம் 6
Wife, Life"s Noble Partner மனைவியின் சிறப்பு
குறள்கள்
- குறள் 51 — மனைத்தக்க மாண்புடைய ளாகித்தற் கொண்டான் வளத்தக்காள் வாழ்க்கைத் துணை
- குறள் 52 — மனைமாட்சி யில்லாள்க ணில்லாயின் வாழ்க்கை யெனைமாட்சித் தாயினு மில்
- குறள் 53 — இல்லதெ னில்லவண் மாண்பானா லுள்ளதெ னில்லவண் மாணாக் கடை
- குறள் 54 — பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பென்னும் திண்மையுண் டாகப் பெறின்
- குறள் 55 — தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யு மழை.
- குறள் 56 — தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற சொற்காத்துச் சோர்விலாள் பெண்
- குறள் 57 — சிறைகாக்குங் காப்பெவன் செய்யு மகளிர் நிறைகாக்குங் காப்பே தலை
- குறள் 58 — பெற்றாற் பெறிற்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப் புத்தேளிர் வாழு முலகு
- குறள் 59 — புகழ்புரிந் தில்லிலோர்க் கில்லை யிகழ்வார்முன் னேறுபோற் பீடு நடை
- குறள் 60 — மங்கல மென்ப மனைமாட்சி மற்றத னன்கல நன்மக்கட் பேறு