புதல்வரைப் பெறுதல் — அதிகாரம் 7
Children அறிவுள்ள பிள்ளைகளைப் பெறுதலின் சிறப்பு
குறள்கள்
- குறள் 61 — பெறுமவற்றுள் யாமறிவ தில்லை யறிவறிந்த மக்கட்பே றல்ல பிற
- குறள் 62 — எழுபிறப்புந் தீயவை தீண்டா பழிபிறங்காப் பண்புடை மக்கட் பெறின்
- குறள் 63 — தம்பொரு ளென்பதம் மக்க ளவர்பொரு டந்தம் வினையான் வரும்
- குறள் 64 — அமிழ்தினு மாற்ற வினிதேதம் மக்கள் சிறுகை யளாவிய கூழ்
- குறள் 65 — மக்கண்மெய் தீண்ட லுடற்கின்ப மற்றவர் சொற்கேட்ட லின்பஞ் செவிக்கு
- குறள் 66 — குழலினி தியாழினி தென்பதம் மக்கண் மழலைச்சொற் கேளா தவர்
- குறள் 67 — தந்தை மகற்காற்று நன்றி யவையத்து முந்தி யிருப்பச் செயல்
- குறள் 68 — தம்மிற்றம் மக்க ளறிவுடைமை மாநிலத்து மன்னுயிர்க் கெல்லா மினிது
- குறள் 69 — ஈன்ற பொழுதிற் பெரிதுவக்குந் தன்மகனைச் சான்றோ னெனக்கேட்ட தாய்
- குறள் 70 — மகன்றந்தைக் காற்று முதவி யிவன்றந்தை யென்னோற்றான் கொல்லெனுஞ் சொல்