குறள் 70 — புதல்வரைப் பெறுதல்
அறத்துப்பால் · இல்லற இயல் · புதல்வரைப் பெறுதல்
குறள்
மகன்றந்தைக் காற்று முதவி யிவன்றந்தை
யென்னோற்றான் கொல்லெனுஞ் சொல்
பொருள்
மக்கள் தம் பெற்றோர்க்குச் செய்யும் உதவி, இவரைப் பெற்றோர் நற்பேறமைந்தவர் என்னும் புகழ் தருவதாம்.