திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

புகழ் — அதிகாரம் 24

அறத்துப்பால் · இல்லற இயல்

Fame நிலையான புகழ்

குறள்கள்

  1. குறள் 231 — ஈத லிசைபட வாழ்த லதுவல்ல தூதிய மில்லை யுயிர்க்கு
  2. குறள் 232 — உரைப்பா ருரைப்பவை யெல்லா மிரப்பார்க்கொன் றீவார்மே னிற்கும் புகழ்
  3. குறள் 233 — ஒன்றா வுலகத் துயர்ந்த புகழல்லாற் பொன்றாது நிற்பதொன் றில்
  4. குறள் 234 — நிலவரை நீள்புக ழாற்றிற் புலவரைப் போற்றாது புத்தே ளுலகு
  5. குறள் 235 — நத்தம்போற் கேடு முளதாகுஞ் சாக்காடும் வித்தகற் கல்லா லரிது
  6. குறள் 236 — தோன்றிற் புகழோடு தோன்றுக வஃதிலார் தோன்றலிற் றோன்றாமை நன்று
  7. குறள் 237 — புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை யிகழ்வாரை நோவ தெவன்
  8. குறள் 238 — வசையென்ப வையத்தார்க் கெல்லா மிசையென்னு மெச்சம் பெறாஅ விடின்
  9. குறள் 239 — வசையிலா வண்பயன் குன்று மிசையிலா யாக்கை பொறுத்த நிலம்
  10. குறள் 240 — வசையொழிய வாழ்வாரே வாழ்வா ரிசையொழிய வாழ்வாரே வாழா தவர்
குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural