பொறை உடைமை — அதிகாரம் 16
Forbearance பொறுமை காத்தல்
குறள்கள்
- குறள் 151 — அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை யிகழ்வார்ப் பொறுத்த றலை
- குறள் 152 — பொறுத்த லிறப்பினை யென்றும் மதனை மறத்த லதனின்று நன்று
- குறள் 153 — இன்மையு ளின்மை விருந்தொரால் வன்மையுள் வன்மை மடவார்ப் பொறை
- குறள் 154 — நிறையுடைமை நீங்காமை வேண்டிற் பொறையுடைமை போற்றி யொழுகப் படும்
- குறள் 155 — ஒறுத்தாரை யொன்றாக வையாரே வைப்பர் பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து
- குறள் 156 — ஒறுத்தார்க் கொருநாளை யின்பம் பொறுத்தார்க்குப் பொன்றுந் துணையும் புகழ்
- குறள் 157 — திறனல்ல தற்பிறர் செய்யினு நோநொந் தறனல்ல செய்யாமை நன்று
- குறள் 158 — மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தந் தகுதியான் வென்று விடல்
- குறள் 159 — துறந்தாரிற் தூய்மை யுடையா ரிறந்தார்வா யின்னாச்சொ னோக்கிற் பவர்
- குறள் 160 — உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லு மின்னாச்சொ னோற்பாரிற் பின்