ஒழுக்கம் உடைமை — அதிகாரம் 14
Right Conduct நல்ல நெறிகளை கடைப்பிடித்தல்
குறள்கள்
- குறள் 131 — ஒழுக்கம் விழுப்பந் தரலா னொழுக்க முயிரினு மோம்பப் படும்
- குறள் 132 — பரிந்தோம்பிக் காக்க வொழுக்கந் தெரிந்தோம்பித் தேரினும் மஃதே துணை
- குறள் 133 — ஒழுக்க முடைமை குடிமை யிழுக்க மிழிந்த பிறப்பாய் விடும்
- குறள் 134 — மறப்பினு மோத்துக் கொளலாகும் பார்ப்பான் பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்
- குறள் 135 — அழுக்கா றுடையான்க ணாக்கம்போன் றில்லை யொழுக்க மிலான்க ணுயர்வு
- குறள் 136 — ஒழுக்கத்தி னொல்கா ருரவோ ரிழுக்கத்தி னேதம் படுபாக் கறிந்து
- குறள் 137 — ஒழுக்கத்தி னெய்துவர் மேன்மை யிழுக்கத்தி னெய்துவ ரெய்தாப் பழி
- குறள் 138 — நன்றிக்கு வித்தாகு நல்லொழுக்கம் தீயொழுக்க மென்று மிடும்பை தரும்
- குறள் 139 — ஒழுக்க முடையவர்க் கொல்லாவே தீய வழுக்கியும் வாயாற் சொலல்
- குறள் 140 — உலகத்தோ டொட்ட வொழுகல் பலகற்றுங் கல்லா ரறிவிலா தார்