நடுவு நிலைமை — அதிகாரம் 12
Impartiality நடுவு நிலைமை
குறள்கள்
- குறள் 111 — தகுதி யெனவொன்று நன்றே பகுதியாற் பாற்பட்ட டொழுகப் பெறின்
- குறள் 112 — செப்ப முடையவ னாக்கஞ் சிதைவின்றி யெச்சத்திற் கேமாப் புடைத்து
- குறள் 113 — நன்றே தரினு நடுவிகந்தா மாக்கத்தை யன்றே யொழிய விடல்
- குறள் 114 — தக்கார் தகவில ரென்ப தவரவ ரெச்சத்தாற் காணப் படும்
- குறள் 115 — கேடும் பெருக்கமு மில்லல்ல நெஞ்சத்துக் கோடாமை சான்றோர்க் கணி
- குறள் 116 — கெடுவல்யா னென்ப தறிகதன் னெஞ்ச நடுவொரீஇ யல்ல செயின்
- குறள் 117 — கெடுவாக வையா துலக நடுவாக நன்றிக்கட் டங்கியான் றாழ்வு
- குறள் 118 — சமன்செய்து சீர்தூக்குங் கோல்போ லமைந்தொருபாற் கோடாமை சான்றோர்க் கணி
- குறள் 119 — சொற்கோட்ட மில்லது செப்ப மொருதலையா வுட்கோட்ட மின்மை பெறின்
- குறள் 120 — வாணிகஞ் செய்வார்க்கு வாணிகம் பேணிப் பிறவுந் தமபோற் செயின்