திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

ஈகை — அதிகாரம் 23

அறத்துப்பால் · இல்லற இயல்

Charity ஏழைக்கு இரங்குதல்

குறள்கள்

  1. குறள் 221 — வறியார்க்கொன் றீவதே யீகைமற் றெல்லாங் குறியெதிர்ப்பை நீர துடைத்து
  2. குறள் 222 — நல்லா றெனினுங் கொளறீது மேலுலக மில்லெனினு மீதலே நன்று
  3. குறள் 223 — இலனென்னு மெவ்வ முரையாமை யீதல் குலனுடையான் கண்ணே உள
  4. குறள் 224 — இன்னா திரக்கப் படுத லிரந்தவ னின்முகங் காணு மளவு
  5. குறள் 225 — ஆற்றுவா ராற்றல் பசியாற்ற லப்பசியை மாற்றுவா ராற்றலிற் பின்
  6. குறள் 226 — அற்றார் ரழிபசி தீர்த்த லஃதொருவன் பெற்றான் பொருள்வைப் புழி
  7. குறள் 227 — பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னுந் தீப்பிணி தீண்ட லரிது
  8. குறள் 228 — ஈத்துவக்கு மின்ப மறியார்கொ றாமுடைமை வைத்திழக்கும் வன்க ணவர்
  9. குறள் 229 — இரத்தலி னின்னாது மன்ற நிரப்பிய தாமே தமிய ருணல்
  10. குறள் 230 — சாதலி னின்னாத தில்லை யினிததூஉ மீத லியையாக் கடை
குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural