திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

அன்பு உடைமை — அதிகாரம் 8

அறத்துப்பால் · இல்லற இயல்

Love அன்பு செலுத்துதல்

குறள்கள்

  1. குறள் 71 — அன்பிற்கு முண்டோ வடைக்குந்தா ழார்வலர் புல்கணீர் பூச றரும்
  2. குறள் 72 — அன்பிலா ரெல்லாந் தமக்குரிய ரன்புடையா ரென்பு முரியர் பிறர்க்கு
  3. குறள் 73 — அன்போ டியைந்த வழக்கென்ப வாருயிர்க் கென்போ டியைந்த தொடர்பு
  4. குறள் 74 — அன்பீனு மார்வ முடைமை யதுவீனு நண்பென்னு நாடாச் சிறப்பு
  5. குறள் 75 — அன்புற் றமர்ந்த வழக்கென்ப வையகத் தின்புற்றா ரெய்துஞ் சிறப்பு
  6. குறள் 76 — அறத்திற்கே யன்புசார் பென்ப வறியார் மறத்திற்கு மஃதே துணை
  7. குறள் 77 — என்பி லதனை வெயில்போலக் காயுமே யன்பி லதனை யறம்
  8. குறள் 78 — அன்பகத் தில்லா வுயிர்வாழ்க்கை வன்பாற்கண் வற்றன் மரந்தளிர்த் தற்று
  9. குறள் 79 — புறத்துறுப் பெல்லா மெவன்செய்யும் யாக்கை யகத்துறுப் பன்பி லவர்க்கு
  10. குறள் 80 — அன்பின் வழிய துயிர்நிலை யஃதிலார்க் கென்புதோல் போர்த்த வுடம்பு
குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural