உழவு — அதிகாரம் 104
Agriculture உழவின் பெருமை
குறள்கள்
- குறள் 1031 — சுழன்றுமேர்ப் பின்ன துலக மதனா லுழன்று முழவே தலை
- குறள் 1032 — உழுவா ருலகத்தார்க் காணியஃ தாற்றார் தொழுவாரே யெல்லாம் பொறுத்து
- குறள் 1033 — உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாந் தொழுதுண்டு பின்செல் பவர்
- குறள் 1034 — பலகுடை நீழலுந் தம்குடைக்கீழ்க் காண்ப ரலகுடை நீழ லவர்
- குறள் 1035 — இரவா ரிரப்பார்க்கொன் றீவர் கரவாது கைசெய்தூண் மாலை யவர்
- குறள் 1036 — உழவினார் கைம்மடங்கி னில்லை விழைவதூஉம் விட்டேமென் பார்க்கும் நிலை
- குறள் 1037 — தொடிப்புழுதி கஃசா உணக்கிற் பிடித்தெருவும் வேண்டாமற் சான்று படும்
- குறள் 1038 — ஏரினும் நன்றா மெருவிடுதல் கட்டபின் நீரினு நன்றதன் காப்பு
- குறள் 1039 — செல்லான் கிழவ னிருப்பின் நிலம்புலந் தில்லாளி னூடி விடும்
- குறள் 1040 — இலமென் றசைஇ யிருப்பாரைக் காணின் நிலமென்னும் நல்லாள் நகும்