திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

சான்றாண்மை — அதிகாரம் 99

பொருட்பால் · ஒழிபு இயல்

Character சான்றாண்மை

குறள்கள்

  1. குறள் 981 — கடனென்ப நல்லவை யெல்லாங் கடனறிந்து சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு
  2. குறள் 982 — குணநலஞ் சான்றோர் நலனே பிறநல மெந்நலத் துள்ளதூ மன்று
  3. குறள் 983 — அன்புநா ணொப்புரவு கண்ணோட்டம் வாய்மையொ டைந்துசால் பூன்றிய தூண்
  4. குறள் 984 — கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமை சொல்லா நலத்தது சால்பு
  5. குறள் 985 — ஆற்றுவா ராற்றல் பணித லதுசான்றோர் மாற்றாரை மாற்றும் படை
  6. குறள் 986 — சால்பிற்குக் கட்டளை யாதெனிற் றோல்வி துலையல்லார் கண்ணுங் கொளல்
  7. குறள் 987 — இன்னாசெய் தார்க்கு மினியவே செய்யாக்கா லென்ன பயத்ததோ சால்பு
  8. குறள் 988 — இன்மை யொருவற் கிளிவன்று சால்பென்னும் திண்மையுண் டாகப் பெறின்
  9. குறள் 989 — ஊழி பெயரினுந் தாம்பெயரார் சான்றாண்மைக் காழி யெனப்படு வார்
  10. குறள் 990 — சான்றவர் சான்றாண்மை குன்றி னிருநிலந்தான் தாங்காது மன்னோ பொறை
குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural