கயமை — அதிகாரம் 108
The Base கயமை
குறள்கள்
- குறள் 1071 — மக்களே போல்வர் கயவ ரவரன்ன வொப்பாரி யாங்கண்ட தில்
- குறள் 1072 — நன்றறி வாரிற் கயவர் திருவுடையார் நெஞ்சத் தவல மிலர்
- குறள் 1073 — தேவ ரனையர் கயவ ரவருந்தா மேவன செய்தொழுக லான்
- குறள் 1074 — அகப்பட்டி யாவாரைக் காணி னவரின் மிகப்பட்டுச் செம்மாக்குங் கீழ்
- குறள் 1075 — அச்சமே கீழ்கள தாசார மெச்ச மவாவுண்டே லுண்டாஞ் சிறிது
- குறள் 1076 — அறைபறை யன்னர் கயவர்தாங் கேட்ட மறைபிறர்க் குய்த்துரைத்த லான்
- குறள் 1077 — ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுடைக்குங் கூன்கைய ரல்லா தவர்க்கு
- குறள் 1078 — சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோற் கொல்லப் பயன்படுங் கீழ்
- குறள் 1079 — உடுப்பதூஉ முண்பதூஉங் காணிற் பிறர்மேல் வடுக்காண வற்றாகுங் கீழ்
- குறள் 1080 — எற்றிற் குரியர் கயவரொன் றுற்றக்கால் விற்றற் குரியர் விரைந்து