வெருவந்த செய்யாமை — அதிகாரம் 57
Terrorism வரம்புமீறி செய்யாமை
குறள்கள்
- குறள் 561 — தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தா லொத்தாங் கொறுப்பது வேந்து
- குறள் 562 — கடிதோச்சி மெல்ல வெறிக நெடிதாக்க நீங்காமை வேண்டு பவர்
- குறள் 563 — வெருவந்த செய்தொழுகும் வெங்கோல னாயி னொருவந்த மொல்லை கெடும்
- குறள் 564 — இறைகடிய னென்றுரைக்கு மின்னாச்சொல் வேந்த னுறைகடுகி யொல்லைக் கெடும்
- குறள் 565 — அருஞ்செவ்வி யின்னா முகத்தான் பெருஞ்செல்வம் பேய்கண்ட தன்ன துடைத்து
- குறள் 566 — கடுஞ்சொல்லன் கண்ணில னாயி னெடும்செல்வ நீடின்றி யாங்கே கெடும்
- குறள் 567 — கடுமொழியுங் கையிகந்த தண்டமும் வேந்த னடுமுரண் டேய்க்கு மரம்
- குறள் 568 — இனத்தாற்றி யெண்ணாத வேந்தன் சினத்தாற்றிச் சீறிற் சிறுகுந் திரு
- குறள் 569 — செருவந்த போழ்திற் சிறைசெய்யா வேந்தன் வெருவந்து வெய்து கெடும்
- குறள் 570 — கல்லார்ப் பிணிக்குங் கடுங்கோ லதுவல்ல தில்லை நிலக்குப் பொறை