வலி அறிதல் — அதிகாரம் 48
Strength சக்தி அறிதல்
குறள்கள்
- குறள் 471 — வினைவலியுந் தன்வலியு மாற்றான் வலியுந் துணைவலியுந் தூக்கிச் செயல்
- குறள் 472 — ஒல்வ தறிவ தறிந்ததன் கட்டங்கிச் செல்வார்க்குச் செல்லாத தில்
- குறள் 473 — உடைத்தம் வலியறியா ரூக்கத்தி னூக்கி யிடைக்கண் முரிந்தார் பலர்
- குறள் 474 — அமைந்தாங் கொழுகா னளவறியான் தன்னை வியந்தான் விரைந்து கெடும்
- குறள் 475 — பீலிபெய் சாகாடு மச்சிறு மப்பண்டஞ் சால மிகுத்துப் பெயின்
- குறள் 476 — நுனிக்கொம்ப ரேறினா ரஃதிறந் தூக்கின் உயிர்க்கிறுதி யாகி விடும்
- குறள் 477 — ஆற்றி னளவறிந் தீக வதுபொருள் போற்றி வழங்கு நெறி
- குறள் 478 — ஆகா றளவிட்டி தாயினுங் கேடில்லை போகா றகலாக் கடை
- குறள் 479 — அளவறிந்து வாழாதான் வாழ்க்கை யுளபோல இல்லாகித் தோன்றாக் கெடும்
- குறள் 480 — உளவரை தூக்காத வொப்புர வாளன் வளவரை வல்லைக் கெடும்