கண்ணோட்டம் — அதிகாரம் 58
Compassion இரக்கமெனும் கண்
குறள்கள்
- குறள் 571 — கண்ணோட்ட மென்னுங் கழிபெருங் காரிகை யுண்மையா னுண்டிவ் வுலகு
- குறள் 572 — கண்ணோட்டத் துள்ள துலகியல் லஃதிலா ருண்மை நிலக்குப் பொறை
- குறள் 573 — பண்ணென்னாம் பாடற் கியைபின்றேற் கண்ணென்னாங் கண்ணோட்ட மில்லாத கண்
- குறள் 574 — உளபோன் முகத்தேவன் செய்யு மளவினாற் கண்ணேட்ட மில்லாத கண்
- குறள் 575 — கண்ணிற் கணிகலங் கண்ணோட்ட மஃதின்றேல் புண்ணென் றுணரப் படும்
- குறள் 576 — மண்ணோ டியைந்த மரத்தனையர் கண்ணோ டியைந்துகண் ணோடா தவர்
- குறள் 577 — கண்ணோட்ட மில்லவர் கண்ணிலர் கண்ணுடையார் கண்ணோட்ட மின்மையு மில்
- குறள் 578 — கருமஞ் சிதையாமற் கண்ணோட வல்லார்க் குரிமை யுடைத்திவ் வுலகு
- குறள் 579 — ஒருத்தாற்றும் பண்பினார் கண்ணுங்கண் ணோடிப் பொறத்தாற்றும் பண்பே தலை
- குறள் 580 — பெயக்கண்டு நஞ்சுண் டமைவர் நயத்தக்க நாகரிகம் வேண்டு பவர்