காலம் அறிதல் — அதிகாரம் 49
Time காலம் அறிந்து காரியம் ஆற்று
குறள்கள்
- குறள் 481 — பகல்வெல்லுங் கூகையைக் காக்கை யிகல்வெல்லும் வேந்தர்க்கு வேண்டும் பொழுது
- குறள் 482 — பருவத்தோ டொட்ட வொழுக றிருவினைத் தீராமை யார்க்குங் கயிறு
- குறள் 483 — அருவினை யென்ப வுளவோ கருவியாற் கால மறிந்து செயின
- குறள் 484 — ஞாலங் கருதினுங் கைகூடுங் காலங் கருதி யிடத்தாற் செயின்
- குறள் 485 — காலங் கருதி இருப்பர் கலங்காது ஞாலங் கருது பவர்
- குறள் 486 — ஊக்க முடையா னொடுக்கம் பொருதகர் தாக்கற்குப் பேருந் தகைத்து
- குறள் 487 — பொள்ளென வாங்கே புறம்வேரார் காலம்பார்த் துள்வேர்ப்ப ரொள்ளி யவர்
- குறள் 488 — செறுநரைக் காணிற் சுமக்க விறுவரை காணிற் கிழக்காந் தலை
- குறள் 489 — எய்தற் கரிய தியைந்தக்கா லந்நிலையே செய்தற் கரிய செயல்
- குறள் 490 — கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன் குத்தொக்க சீர்த்த விடத்து