திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

இறைமாட்சி — அதிகாரம் 39

பொருட்பால் · அரசு இயல்

The King ஆட்சியின் இலக்கணம்

குறள்கள்

  1. குறள் 381 — படைகுடி கூழமைச்சு நட்பர ணாறு முடையா னரசரு ளேறு
  2. குறள் 382 — அஞ்சாமை யீகை யறிவூக்க மிந்நான்கு மெஞ்சாமை வேந்தற் கியல்பு
  3. குறள் 383 — தூங்காமை கல்வி துணிவுடைமை யிம்மூன்றும் நீங்கா நிலனாள் பவற்கு
  4. குறள் 384 — அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா மான முடைய தரசு
  5. குறள் 385 — இயற்றலு மீட்டலுங் காத்தலுங் காத்த வகுத்தலுங் வல்ல தரசு
  6. குறள் 386 — காட்சிக் கெளியன் கடுஞ்சொல்ல னல்லனேல் மீக்கூறு மன்ன னிலம்
  7. குறள் 387 — இன்சொலா லீத்தளிக்க வல்லாற்க்குத் தன்சொலாற் றான்கண் டனைத்திவ் வுலகு
  8. குறள் 388 — முறைசெய்து காப்பாற்று மன்னவன் மக்கட் கிறையென்று வைக்கப் படும்
  9. குறள் 389 — செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன் கவிகைக்கீழ்த் தங்கு முலகு
  10. குறள் 390 — கொடையளி செங்கோல் குடியோம்ப னான்கு முடையானாம் வேந்தர்க் கொளி
குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural