இடன் அறிதல் — அதிகாரம் 50
Place இடன் அறிந்து செயல்முடி
குறள்கள்
- குறள் 491 — தொடங்கற்க வெவ்வினையு மொள்ளற்க முற்று மிடங்கண்ட பின்னல் லது
- குறள் 492 — முரண்சேர்ந்த மொய்ம்பி னவர்க்கு மரண்சேர்ந்தா மாக்கம் பலவுந் தரும்
- குறள் 493 — ஆற்றாரு மாற்றி யடுப விடனறிந்து போற்றார்கட் போற்றிச் செயின்
- குறள் 494 — எண்ணியா ரெண்ண மிழப்ப ரிடனறிந்து துன்னியார் துன்னிச் செயின்
- குறள் 495 — நெடும்புனலுள் வெல்லு முதலை யடும்புனலு ணீங்கி னதனைப் பிற
- குறள் 496 — கடலோடா கால்வ னெடுந்தேர் கடலோடு நாவாயு மோடா நிலத்து
- குறள் 497 — அஞ்சாமை யல்லாற் றுணைவேண்டா வெஞ்சாமை யெண்ணி மிடத்தாற் செயின்
- குறள் 498 — சிறுபடையான் செல்லிடஞ் சேரி னுறுபடையா னூக்க மழிந்து விடும்
- குறள் 499 — சிறைநலனுஞ் சீரு மிலரெனினு மாந்த ருறைநிலத்தோ டொட்ட லரிது
- குறள் 500 — காலாழ் களரி னரியடுங் கண்ணஞ்சா வேலாழ் முகத்த களிறு