அறிவுடைமை — அதிகாரம் 43
Wisdom அறிவுடைமை
குறள்கள்
- குறள் 421 — அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கு முள்ளழிக்க லாகா வரண்
- குறள் 422 — சென்ற விடத்தாற் செலவிடா தீதொரீஇ நன்றின்பா லுய்ப்ப தறிவு
- குறள் 423 — எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினு மப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு
- குறள் 424 — எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய் நுண்பொருள் காண்ப தறிவு
- குறள் 425 — உலகந் தழீஇய தொட்ப மலர்தலுங் கூம்பலு மில்ல தறிவு
- குறள் 426 — எவ்வ துறைவ துலக முலகத்தோ டவ்வ துறைவ தறிவு
- குறள் 427 — அறிவுடையா ராவ தறிவா ரறிவிலா ரஃதறி கல்லா தவர்
- குறள் 428 — அஞ்சுவ தஞ்சாமை பேதைமை யஞ்சுவ தஞ்ச லறிவார் தொழில்
- குறள் 429 — எதிரதாக் காக்கு மறிவினார்க் கில்லை யதிர வருவதோர் நோய்
- குறள் 430 — அறிவுடையா ரெல்லா முடைய ரறிவிலா ரென்னுடைய ரேனு மிலர்