திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

ஆள்வினை உடைமை — அதிகாரம் 62

பொருட்பால் · அரசு இயல்

Manliness முயற்சி திருவினையாக்கும்

குறள்கள்

  1. குறள் 611 — அருமை யுடைத்தென் றசாவாமை வேண்டும் பெருமை முயற்சி தரும்
  2. குறள் 612 — வினைக்கண் வினைகெட லோம்பல் வினைக்குறை தீர்ந்தாரிற் றீர்ந்தன் றுலகு
  3. குறள் 613 — தாளாண்மை யென்னுந் தகைமைக்கட் டங்கிற்றே வேளாண்மை யென்னுஞ் செருக்கு
  4. குறள் 614 — தாளாண்மை யில்லாதான் வேளாண்மை பேடிகை வாளாண்மை போலக் கெடும்
  5. குறள் 615 — இன்பம் விழையான் வினைவிழைவான் றன்கேளிர் துன்பந் துடைத்தூன்றுந் தூண்
  6. குறள் 616 — முயற்சி திருவினை யாக்கு முயற்றின்மை யின்மை புகுத்தி விடும்
  7. குறள் 617 — மடியுளாண் மாமுகடி யென்ப மடியிலான் றாளுளா டாமரையி னாள்
  8. குறள் 618 — பொறியின்மை யார்க்கும் பழியன் றறிவறிந் தாள்வினை யின்மை பழி
  9. குறள் 619 — தெய்வத்தா னாகா தெனினு முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்
  10. குறள் 620 — ஊழையு முப்பக்கங் காண்ப ருலைவின்றித் தாழா துஞற்று பவர்
குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural