தூது — அதிகாரம் 69
Envoys தூது
குறள்கள்
- குறள் 681 — அன்புடைமை யான்ற குடிப்பிறத்தல் வேந்தவாம் பண்புடைமை தூதுரைப்பான் பண்பு
- குறள் 682 — அன்பறி வாராய்ந்த சொல்வன்மை தூதுரைப்பார்க் கின்றி யமையாத மூன்று
- குறள் 683 — நூலார்மு னூல்வல்ல னாகுதல் வேலார்முன் வென்றி வினையுரைப்பான் பண்பு
- குறள் 684 — அறிவுரு வாராய்ந்த கல்வியிம் மூன்றின் செறிவுடையான் செல்க வினைக்கு
- குறள் 685 — தொகச்சொல்லித் தூவாத நீக்கி நகச்சொல்லி நன்றி பயப்பதாந் தூது
- குறள் 686 — கற்றுக்கண் ணஞ்சான் செலச்சொல்லிக் காலத்தாற் றக்க தறிவதாந் தூது.
- குறள் 687 — கடனறிந்து காலங் கருதி யிடனறிந் தெண்ணி யுரைப்பான் றலை
- குறள் 688 — தூய்மை துணைமை துணிவுடைமை இம்மூன்றின் வாய்மை வழியுரைப்பான் பண்பு
- குறள் 689 — விடுமாற்றம் வேந்தர்க் குரைப்பான் வடுமாற்றம் வாய்சோரா வன்க ணவன்
- குறள் 690 — இறுதி பயப்பினு மெஞ்சா திறைவற் குறுதி பயப்பதாந் தூது