சொல் வன்மை — அதிகாரம் 65
Persuasiveness பேச்சுத்திறன்
குறள்கள்
- குறள் 641 — நாநல மென்னு நலனுடைமை யந்நலம் யாநலத் துள்ளதூஉ மன்று
- குறள் 642 — ஆக்கமுங் கேடு் மதனால் வருதலாற் காத்தோம்பல் சொல்லின்கட் சோர்வு
- குறள் 643 — கேட்டார்ப் பிணிக்குந் தகையவாய்க் கேளாரும் வேட்ப மொழிவதாஞ் சொல்
- குறள் 644 — திறனறிந்து சொல்லுக சொல்லை யறனும் பொருளு மதனினூஉங் கில்
- குறள் 645 — சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொ லச்சொல்லை வெல்லுஞ்சொ லின்மை யறிந்து
- குறள் 646 — வேட்பத்தாஞ் சொல்லிப் பிறர்சொற் பயன்கோடன் மாட்சியின் மாசற்றார் கோள்
- குறள் 647 — சொலல்வல்லன் சோர்வில னஞ்சா னவனை யிகல்வெல்லல் யார்க்கு மரிது
- குறள் 648 — விரைந்து தொழில்கேட்கு ஞாலம் நிரந்தினிது சொல்லுதல் வல்லார்ப் பெறின்
- குறள் 649 — பலசொல்லக் காமுறுவர் மன்றமா சற்ற சிலசொல்லல் றேற்றா தவர்
- குறள் 650 — இணரூழ்த்து நாறா மலரனையர் கற்ற துணர விரித்துரையா தார்