திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

பொருள் செயல் வகை — அதிகாரம் 76

பொருட்பால் · அங்கவியல்

Wealth பொருள்செயல்வகை

குறள்கள்

  1. குறள் 751 — பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும் பொருளல்ல தில்லை பொருள்
  2. குறள் 752 — இல்லாரை யெல்லாரும் மெள்ளுவர் செல்வரை யெல்லாருஞ் செய்வர் சிறப்பு
  3. குறள் 753 — பொருளென்னும் பொய்யா விளக்கம் மிருளறுக்கு மெண்ணிய தேயத்துச் சென்று
  4. குறள் 754 — அறனீனு மின்பமு மீனுந் திறனறிந்து தீதின்றி வந்த பொருள்
  5. குறள் 755 — அருளொடு மன்பொடும் வாராப் பொருளாக்கம் புல்லார் புரள விடல்
  6. குறள் 756 — உறுபொருளு முல்கு பொருளுந்தன் னொன்னார்த் தெறுபொருளும் வேந்தன் பொருள்
  7. குறள் 757 — அருளென்னு மன்பீன் குழவி பொருளென்னுஞ் செல்வச் செவிலியா லுண்டு
  8. குறள் 758 — குன்றேறி யானைப்போர் கண்டற்றாற் றன்கைத்தொன் றுண்டாகச் செய்வான் வினை
  9. குறள் 759 — செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கு மெஃகதனிற் கூரிய தில்
  10. குறள் 760 — ஒண்பொருள் காழ்ப்ப வியற்றியார்க் கெண்பொரு ளேனை யிரண்டும் மொருங்கு
குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural