பெண்வழிச் சேறல் — அதிகாரம் 91
Uxoriousness மனைவி சொல் மந்திரமா
குறள்கள்
- குறள் 901 — மனைவிழைவார் மாண்பய னெய்தார் வினைவிழைவார் வேண்டாப் பொருளு மது
- குறள் 902 — பேணாது பெண்விழைவா னாக்கம் பெரியதோர் நாணாக நாணுத் தரும்
- குறள் 903 — இல்லாள்கட் டாழ்ந்த வியல்பின்மை றெஞ்ஞான்றும் நல்லாரு ணாணுத் தரும்
- குறள் 904 — மனையாளை யஞ்சு மறுமையிலாளன் வினையாண்மை வீறெய்த லின்று
- குறள் 905 — இல்லாளை யஞ்சுவா னஞ்சுமற் றெஞ்ஞான்று நல்லார்க்கு நல்ல செயல்
- குறள் 906 — இமையாரின் வாழினும் பாடிலரே யில்லா ளமையார்தோ ளஞ்சு பவர்
- குறள் 907 — பெண்ணேவல் செய்தொழுகு மாண்மையி னாணுடைப் பெண்ணே பெருமை யுடைத்து
- குறள் 908 — நட்டார் குறைமுடியார் நன்றாற்றார் நன்னுதலாள் பெட்டாங் கொழுகு பவர்
- குறள் 909 — அறவினையு மான்ற பொருளும் பிறவினையும் பெண்ணேவல் செய்வார்க ணில்
- குறள் 910 — எண்சேர்ந்த நெஞ்சத் திடனுடையார்க் கெஞ்ஞான்றும் பெண்சேர்ந்தாம் பேதைமை யில்