திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

பழைமை — அதிகாரம் 81

பொருட்பால் · அங்கவியல்

Old Friends பழைமை

குறள்கள்

  1. குறள் 801 — பழைமை யெனப்படுவ தியாதெனின் யாதுங் கிழமையைக் கீழ்த்திடா நட்பு
  2. குறள் 802 — நட்பிற் குறுப்புக் கெழுதகைமை மற்றதற்கு உப்பாதல் சான்றோர் கடன்
  3. குறள் 803 — பழகிய நட்பெவன் செய்யுங் கெழுதகைமை செய்தாங் கமையாக் கடை
  4. குறள் 804 — விழைதகையான் வேண்டி யிருப்பர் கெழுதகையாற் கேளாது நட்டார் செயின்
  5. குறள் 805 — பேதைமை யொன்றோ பெருங்கிழமை யென்றுணர்க நோதக்க நட்டார் செயின்
  6. குறள் 806 — எல்லைக்க ணின்றார் துறவார் தொலைவிடத்தும் தொல்லைக்க ணின்றார் தொடர்பு
  7. குறள் 807 — அழிவந்த செய்யினு மன்பறா ரன்பின் வழிவந்த கேண்மை யவர்
  8. குறள் 808 — கேளிழுக்கங் கேளாக் கெழுதகைமை வல்லார்க்கு நாளிழுக்க நட்டார் செயின்
  9. குறள் 809 — கெடாஅர் வழிவந்த கேண்மையார் கேண்மை விடாஅர் விழையு முலகு
  10. குறள் 810 — விழையார் விழையப் படுவர் பழையார்கட் பண்பின் றலைப்பிரியா தார்
குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural